சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது, மக்களின் வாழ்வாதாரங்கள், விளைநிலங்கள் பறிபோகின்றன, எட்டு ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்; ஐநூறு ஏக்கர் வனப்பகுதி, எட்டு மலைகள் அழிக்க வேண்டியதிருக்கும். இது எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்க எண்ணம், அதன் பின்னணி என்ன என கேள்வி கேட்டார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால், தற்போது அவர் முதல்வரான உடன் தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிவிட்டார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின் 8-வழிச்சாலையின் பெயரை மாற்றி பசுமைவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். இப்படி மாற்றி பேசுவது அவருக்கு ஒன்றும் புதிது அல்ல, ஏற்கனவே, தான் கையெழுத்திட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தானே போராட்டம் நடத்தியவர்தானே ஸ்டாலின்!