எதிர்கட்சி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் மார்க்ரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தை சேர்ந்த இவர், நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராக ஒரு முறையும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளதால் பா.ஜ.கவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் வெற்றி உறுதியாகியுள்ள சூழலில், சரத்பவார், தான் பலிகடா ஆகாமல் தப்பித்து யஷ்வந்த் சின்ஹாவையும், மார்க்ரெட் ஆல்வாவையும் பலிகடாவாக ஆக்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.