தர்மஜுதா பெங்காலி திரைப்படத்திற்கு எதிர்ப்பு

பாலிவுட் திரைப்படங்கள் அதன் ஹிந்து விரோத நிலைப்பாட்டிற்காக பிரபலம். சமீப காலமாக ஹிந்துக்களிடம் வந்துள்ள விழிப்புணர்வால் பாலிவுட்டின் திரைப்படம் தயாரிக்கும் பாணியில் மாற்றங்கள் லேசாக தெரிய ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில், தற்போது மேற்கு வங்கத்தை ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ எம்.எல்.ஏவும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராஜ் சக்ரவர்த்தி தயாரித்துள்ள ‘தர்மஜுதா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஹிந்துக்கள் பயங்கரவாதிகளாகவும் முஸ்லிம்கள் அப்பாவிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கு வங்கத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி ஹிந்துக்கள் இந்த திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க சமூக உடகங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 1946ல் இருந்து வங்க தேச ஹிந்துக்கள் அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பலமுறை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை என பல கொடூரங்களை சந்தித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ வன்முறைகள், 2021 தேர்தலுக்குப் பிந்தைய ஹிந்துக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள், கற்பழிப்புகள், வீடுகள் சூறையாடல், தீவைப்பு போன்ற சம்பவங்கள் போன்றவை, அங்கு முஸ்லிம் வன்முறைகள், வகுப்புவாத பயங்கரங்கள் என்பது எப்படி இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது என்பதை உலகிற்கே வெளிச்சம்போட்டுக் காட்டியது. மேற்கு வங்கத்தில் 35 வருட இடதுசாரிகள் ஆட்சியும் 10 வருட திருணமூல் காங்கிரஸ் ஆட்சியும் அங்குள்ள ஹிந்துக்களுக்கு எந்த விடிவையும் தரவில்லை. மாறாக திருணமூல் காங்கிரஸ் உட்பட நாட்டில் உள்ள பல கட்சிகளின் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வாக்குவங்கி அரசியல் மிகவும் ஆபத்தான எல்லையை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்பதற்கு இதுபோன்ற திரைப்படங்களும் ஒரு உதாரணம்.