ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகள், இளைஞர்களுக்கு நாடு முழுவதும் ராணுவ நலக் கல்வி சங்கத்தின் (AWES) கீழ் செயல்படும் உண்டு ராணுவ உறைவிடப் பள்ளிகள், கல்லூரிகளில் பள்ளி கல்வி, கல்லூரிப் படிப்புகளுக்கு நமது பாரத ராணுவம் ‘ஆபரேஷன் சத்பவனா’ என்ற பெயரில் நிதியுதவி அளிக்க உள்ளது. அடுத்த கல்வியாண்டில், பஞ்சாப், உத்தராகண்ட்டில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளிகளில் தலா 50 இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 2022 – 23 கல்வியாண்டில் டெல்லி, உ.பியில் உள்ள ராணுவ பள்ளிகளில் 100 இடங்கள் மேலும் சேர்க்கப்படும். இதைத்தவிர பெங்களூரு, கவுஹாத்தியில் உள்ள கல்லூரிகளில் தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு நட்சத்திர ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் வாய்ப்பு, புதுமை கற்றல் போன்ற சிறந்த பயிற்சிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.