பள்ளிகள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று, பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை வரும் என, நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க பல மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. யுனிசெப் அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் அனைத்தும் பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பூசி உள்ளிட்டவைகள் துணையுடன் பள்ளிகளை திறக்க உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ‘பள்ளிகளை திறக்கவில்லை எனில் ஒருதலைமுறையே பாழாகிவிடும் என வேதனை தெரிவித்துள்ளன. இந்நிலையில் உத்தரகண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6 முதல் பிளஸ்2 வகுப்புவரை பள்ளிகளை திறக்க அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பீஹார், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களும் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.