ஆன்லைன் கல்வி வழிகாட்டு முறைகள்

கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகள் தற்போது இணையம் வழியாகவே நடைபெறுகின்றன. இந்த ‘ஆன்லைன்’ வகுப்புகளில் பல பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக சமீபத்தில் புகார்கள் எழுந்து சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கல்வி அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, ஆன்லைன் வழிகாட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவை, ஒவ்வொரு பள்ளிக்கும் விரைவில் அனுப்பப்படும். இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், மாணவர், மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் என ஒவ்வொருவரும் எந்த வகையான உடைகளை அணிய வேண்டும், எப்படி பாடம் எடுக்க வேண்டும், குழுக்களில் இடம் பெறுவோர்,  கேமரா கோணங்களை சரியான முறையில் அமைப்பது குறித்த விவரங்கள் என பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.