கெஜ்ரிவாலின் பழைய வீடியோ

தேசிய அளவில், வக்பு வாரியத்தின் நில அபகரிப்புக் கொள்கை தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜனவரி 24, 2019 அன்று அய்வான் இ காலிப் ஆடிட்டோரியத்தில் டெல்லி வக்பு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய கெஜாரிவால், ​​​​‘உலக அளவில் பெரும் தொழில் அதிபரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு வக்பு சொத்தில் கட்டப்பட்டுள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால், அதை மீண்டும் வக்பு வாரியத்திடம் கொடுப்பேன். நான் உங்களுடன் இதயத்தோடும் ஆன்மாவோடும் இருக்கிறேன். வரும் நாட்களில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வக்புக்கு பணம் கிடைக்கும்’ என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். வக்பு வாரயம் பாரதத்தின் இரண்டாவது மிகப்பெரிய நில உரிமையாளர். டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட டெல்லி நிலத்தில் 77 சதவீதம் டெல்லி வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும், வக்பு வாரியம் மற்றும் ஆண்டிலியா கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இடையேயான இது தொடர்பான வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.