வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவை நுகர்வோர் விதி மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டது இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் இந்த இருநிறுவனங்கள் மீதும் 3,200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் குறிப்பாக அதிகக் கட்டணம் வசூலித்தல், சேவைகள் வழங்குவதில் குறைபாடு, உரிய காரணமின்றி பயணத்தை ரத்து செய்வது, கட்டண உயர்வு, ஆன்லைனில் செலுத்தாமல் பணமாக கட்டணத்தை தர வலியுறுத்துவது, குறைவான கட்டணத்துக்கும் அதிக கட்டணம் வசூலிப்பது, ஓட்டுநர்களின் நடத்தை மீறல்கள், வாகனங்களில் ஏசி போட மறுப்பது உள்ளிட்ட புகார்கள் அதிகம் இடம் பிடித்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மே 1ம் வரை ஓலாவுக்கு எதிராக 2,482 புகார்களும், உபருக்கு எதிராக 770 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, மத்திய அரசு இத்தகைய சேவை நிறுவனங்கள் தங்களை திருத்திக்கொள்ள அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த புகார்கள் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.