மதம் தொடர்பான ஹிந்துக்களின் உணர்வுகளை பாகிஸ்தான் தொடர்ந்து புண்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாராவிற்கு வரும் பக்தர்களுக்கு கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப் நிர்வாகக் குழு சிகரெட்டை பேக்கிங் செய்யும் பேப்பர்களில் அவர்களின் புனித ‘கடா’ பிரசாதம் தரப்பட்டு உள்ளது. சிகிரெட் புகைப்பது சீக்கிய வழிமுறையில் குற்றம் என்பதால், பாகிஸ்தானின் இந்த செயல்பாடு சீக்கிய பக்தர்களை புண்படுத்தி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என சீக்கியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கூறியுள்ளது. சில நாட்கள் முன்னதாக இதே குருத்வாராவில் பாகிஸ்தானின் மாடல் ஒருவர் தலையில் துணி இல்லாமல் போட்டோஷூட் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.