காஞ்சிபுரம், செவிலிமேடு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 2,160 சதுரடி நிலத்தில் தனி நபர் ஒருவர் காங்கிரீட் தளம் போட்டு வீடு கட்டியுள்ளார் என்று வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 13 அன்று மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் ஆக்கிரமித்த இடத்தில்தான் ஆண்டுதோறும் காப்பு கட்டி திருவிழா நடத்தப்படும். அவர் வீடு கட்ட அஸ்திவாரம் போடும் போதே கோயில் நிலத்தில் வீடு கட்டக் கூடாது என்று கிராம உதவியாளர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. எனவே, கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து உடனடியாக அரசு மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் பொதுமக்கள்.