அரசுப்பணி, அரசு கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கான ஜாதி சான்றிதழை வழங்கும்போது அவர்களின் ஊதியம், வேளாண் வருமானம் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, மாவட்ட கலெக்டர்களுக்கு இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஆண்டு வருமானம் 8 லட்சமாக இருந்தாலும், ஓ.பி.சி. பிரிவினருக்கான ஜாதி சான்றிதழை தடையின்றி வழங்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.