குலாம் அலிக்கு பதவிப் பிரமாணம்

குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட குலாம் அலிக்கு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அப்போது உடன் இருந்தார். குலாம் அலி காஷ்மீரில் உள்ள குஜ்ஜார் சமுதாயத் தலைவராவார். ஜம்மு காஷ்மீரில் கடந்தகால அப்துல்லாக்களின் ஆட்சியில் குஜ்ஜர் சமுதாயத்தினர் அரசியலில் ஒரங்கட்டப்பட்டிருந்தனர். சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கத்திற்குப் பிறகு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மீண்டும் கிடைத்துள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கத்தை அப்போதே வரவேற்றவர் குலாம் அலி என்பது கவனத்தில் கொள்ளதக்கது.