கிரிப்டோ கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ பாதிரி ஜார்ஜ்பொன்னையா பாரதமாதா, பூமித்தாய், பிரதமர், உள்துறைஅமைச்சர், தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியிருந்தார். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1980க்குப் பிறகு ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிட்டனர். இந்த கள நிலவரத்தை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதிபலிக்கவில்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துக்களில் பலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்களை ஹிந்துக்களாக ஆவணங்களில் காட்டியுள்ளனர். அவர்கள் ரகசிய கிறிஸ்தவர்கள் (கிரிப்டோ- கிறிஸ்தவர்கள்.) இப்பட்டியலில் ஒரு நீதிபதியும் இருந்தார். மனுதாரர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் 62 சதவீதத்தை தாண்டிவிட்டது. விரைவில் அது 72 சதவீதமாக உயர்ந்துவிடும் என்று சவால்விட்டு பேசியுள்ளார். இதில், ஹிந்துக்களை எச்சரிப்பதுடன், கிறிஸ்தவம் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வெறுப்பு பேச்சுகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும் என தெரிவித்தார்.