என்.டி.பி.சி புதிய முயற்சி

மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனம் என்.டி.பி.சி. நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமாக மட்டுமே அறியப்பட்ட இந்த நிறுவனம் ஹைட்ரஜன் பொருளாதாரத்திற்கு பாரதத்தை விரைவில் மாற்றும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது. என்.டி.பி.சி, சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் (சி.ஜி.டி) நிறுவனத்துடன் இணைந்து இயற்கை எரிவாயுவுடன் ஹைட்ரஜனை கலப்பது, எரிவாயு டிகார்பனைசிங் குறித்த ஒரு முன்னோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. மேலும், ஆந்திர மாநிலம், ராமகுண்டத்தில் பசுமை மெத்தனால் உற்பத்தி குறித்த இந்த நிறுவன ஆய்வுகள் நிறைவடைந்துள்ளது, நிறுவனம் விரைவில் இதில் இறுதி முதலீட்டு முடிவை எடுக்கும். லடாக்கில் உள்ள லே பகுதியில் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் மற்றும் ஹைட்ரஜன் செல் பேருந்துகளை வாங்குவது, இயக்குவது குறித்தும் என்.டி.பி.சி டெண்டர் விட்டுள்ளது.