டெல்லியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அந்த சிறுமியின் குடும்பப் புகைப்படத்தை போக்சோ சட்டத்தை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அவ்விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் ராகுலின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதனை சதிச்செயல் என ராகுல் குற்றம் சாட்டினார். இந்நிலையில், அந்த பதிவை முகநூலிலும் வெளியிட்டார் ராகுல். அதனை ராகுலோ அல்லது முகநூல் நிறுவனமோ நீக்கவில்லை, இதனால் முகநூல் நிறுவன அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) நோட்டீஸ் அனுப்பியது. அதனையடுத்து அந்தப் பதிவை உடனடியாக நீக்கக்கோரி ஒரு நோட்டீசை முகநூல் நிறுவனம் ராகுலுக்கு அனுப்பியுள்ளது. என்.சி.பி.சி.ஆரில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளது.