தரமற்ற ரேஷன் அரிசி

உடுமலைப்பேட்டை வட்டம், மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்விரு கிராமங்களுக்கும் சேர்த்து மாவடப்பு கிராமத்தில் வைத்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக அரசின் ரேஷன் பொருட்கள் ஊருக்கே வந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முன்பை போல சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காடம்பாறையில் இம்மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக உள்ளது. சமைத்துச் சாப்பிட முடியவில்லை என்றும் மலைவாழ் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இங்கு மட்டுமல்ல, சமீபகாலமாக ரேஷன் பொருட்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.