அதானி குழுமத்திற்கு ஆதரவாக அரசின் விதிகளை மாற்றியமைத்ததாகவும் மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு விற்க ஜி.வி.கே குழுமம் வற்புறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்மொழிந்தார். இதனல், ஜி.வி.கே குழுமத்தின் துணைத் தலைவர் ஜி.வி சஞ்சய் ரெட்டி மறுத்துள்ளார். மும்பை விமான நிலைய ஒப்பந்தம் அதானி குழுமத்தாலோ அல்லது வேறு யாராலோ எந்த அழுத்தமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகவும் எளிமையானது, மிகவும் நேரடியானது. எங்களுக்கு நிறைய நிபந்தனைகள் இல்லை, காலக்கெடு மிகவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது முதன்மையானது. எங்கள் நிறுவனம் நிதி திரட்டுவதை தேடிக் கொண்டிருந்தது, ஏனெனில் எங்கள் விமான நிலைய ஹோல்டிங் நிறுவனத்தில், நாங்கள் பெங்களூரு விமான நிலையத்தை வாங்கியபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கடனை அதிகரித்திருந்தோம். அந்தக் கடன் நிலுவையில் இருந்தது. அப்போது கௌதம் அதானி என்னை அணுகினார். மும்பை விமான நிலையத்தில் அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் அவருடன் பரிவர்த்தனை செய்யத் தயாரா என்றும் கேட்டார். எங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், கெளதம் அதானியை அணுகுவதற்கு முன்பு, நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்ட மற்ற முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் அவர்களுக்கு பல நிபந்தனைகள் இருந்தன. நாங்கள் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோம். மூன்று மாதங்களுக்கு, விமான நிலைய வணிகம் மூடப்பட்டது. எங்களுக்கு வருமானம் ஏதுமில்லை. அது எங்களுக்கு அதிக நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியது, எனவே பரிவர்த்தனையை விரைவாக முடிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றினோம். இதனையடுத்து, அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஜூலை 2021ல் மும்பை விமான நிலையத்தை ஜி.வி.கே நிறுவனத்திடம் இருந்து வாங்கிக்கொண்டது” என்றார்.