டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், ‘இந்திய அரசியல் சாசனம் மட்டுமல்ல, அதன் நாகரிகம், நம் கலாசார பாரம்பரியம் ஆகியவை மதத்தின் அடிப்படையில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இங்கு அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அதனால் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தத் தேவையே இல்லை. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மதத்தின் அடிப்படையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முஸ்லிம் அல்லாதோருக்கு உரிய அங்கீகாரம் கிடையாது. அதனால் அங்கு, சிறுபான்மையினர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். ஆனால் பல ஆயிரம் பழமையான பாரத நாகரிகம், எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் அமையவில்லை. இங்கு மதத்தின் அடிப்படையிலான ஆட்சியும் இல்லை’ என்று கூறினார்.