நிலக்கரி சுரங்கம் அமைக்கக் கூடாது

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவரது டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி. ரவியூடன் நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு பா.ஜ.க. சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மத்திய அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.