நிதி அயோக் பாரதத்தின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சிக்கு அரசு எடுக்க வேண்டிய முடிவுகள், மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்து வருகிறது. இந்த நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விடுத்து அமெரிக்கா செல்ல உள்ளார் பரமேஸ்வரன். அவர் 3 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருப்பார். இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம், நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் இந்த பொறுப்பை வகிப்பார். இவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சக பணி நியமன குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இவரது செயல்பாடுகள் அடிப்படையில் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். நிதி அயோக்கின் புதிய நிதலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.விஆ.ர் சுப்ரமணியம், சத்தீஸ்கர் கேடரின் 1987 பேட்ச் ஐ.ஏஎ.ஸ் அதிகாரியாவார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், பொறியியல் பட்டம் பெற்றவர். லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர். 2004 மற்றும் 2008ம் ஆண்டுகளில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் உலக வங்கியில் பணியாற்ற சென்றார். அதன் பிறகு 2012ல் பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பினார். 2015 வரை பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். அதன் பிறகு அவர் மீண்டும் சத்தீஸ்கருக்குச் சென்றார், அங்கு முதன்மைச் செயலாளராகவும் கூடுதல் உள்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2018ல் ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகச் செயலாளராகவும் பணியாற்றினார்.