என்.ஐ.ஏ சோதனை

ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அந்த அமைப்பினரின் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சோதனை நடத்தியது. பாரமுல்லா, புத்காம், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. நன்கொடைகள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி சேகரித்து வரும் ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர்கள் அந்த நிதியைப் வன்முறை, பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது, இந்த பணம், ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத குழுக்களுக்கு அனுப்பப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் பங்கேற்க புதிய உறுப்பினர்களை (ருகுன்கள்) சேர்த்து வருகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.