கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு முயற்சியில் ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் அவனுடன் தொடர்புடைய முகமது தல்கா, அசாருதீன், நவாஸ் இஸ்மாயில், ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐ.ஏ, இது தொடர்பாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், கணினி, பென் டிரைவ், அலைபேசி உள்ளிட்ட பல ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளது. இந்த சுழலில். கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.