என்.ஐ.ஏ நீதிமன்றம் விசாரணை

உத்தர பிரதேச ஹத்ராஸ் வழக்கில் சமூக ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் செயல்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பன் உட்பட எட்டு பி.எப்.ஐ செயல்பாட்டாளர்கள் செயல்பட்டனர். இவர்களை உ.பி காவல்துறை கைது செய்தது. ஹத்ராஸில் ஜாதிக் கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுவதற்காக இவர்கள் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நிதி பெற்றனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் மீதான வழக்கை மதுரா  நீதிமன்றம், விசாரித்து வந்தது. சிறப்பு அதிரடிப்படை தாக்கல் செய்த மனுவையடுத்து இவ்வழக்கை லக்னோவில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.