வங்க தேசத்தை சேர்ந்த, ரபிக், சோபுஜ் ஷேக், ரஃபிக்துல் இஸ்லாம் உள்ளிட்ட 8 பேர் சட்ட விரோதமாக பாரதம் வந்து, போலியாக ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பெங்களூருவில் தங்கியிருந்தனர். இவர்கள் அங்கு மனிதக் கடத்தல், பெண்களை சித்ரவதை செய்தல், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்து வந்தனர். இதனை கண்டுபிடித்த தேசிய புலனாய்வு நிறுவனம், இது சம்பந்தமாக 13 பேரை கைது கடந்த ஜூன் மாதம் செய்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், தற்போது அவர்கள் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.