மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு மமதா பேனர்ஜி தலைமையிலான திருணமூல் கட்சியினர் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) அறிக்கை இணையதளத்தில் வெளியானது. இதனை எதிர்த்து கருத்து கூறிய மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி, இது பா.ஜ.கவின் அரசியல் சதித்திட்டம், அறிக்கை இணையதள ஊடகங்களில் கசியவிடப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என குற்றம் சாட்டினார். அதனை என்.எச்.ஆர்.சி திட்டவட்டமாக மறுத்தது. இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வன்முறை குறித்தான இந்த இறுதி அறிக்கை, நீதித்துறையின் உத்தரவின் பேரிலேயே வெளியிடப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.