அடுத்தகட்ட ஷூட்டிங்

டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை தமிழக முதல்வர் பார்வையிட செல்கிறார் என்றதுமே கண்டிப்பாக எதாவது கண்டெண்ட் கிடைக்கும், மீம்ஸ் போட்டு கிண்டல் அடிக்கலாம் என நெட்டிசன்கள் தயாராகிவிட்டனர் போலும். ஸ்டாலின் மழை வெள்ள சேதத்தை பார்வையிடும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் மீம்ஸ் வெளியாக ஆரம்பித்தன. சென்னையில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட கையோடு, தனது அடுத்தகட்ட ஷூட்டிங்கை தி.மு.க முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆரம்பித்துவிட்டார், நெற்பயிரை பூந்தொட்டியில் வைத்து பார்வையிடும் ஒரே முதல்வர், ஈர நிலத்தில் கால்படாமல் இருக்க விவசாய நிலத்தில் சிமெண்ட் சாலை போட்டு பார்வையிடும் ஒரே முதல்வர், சிமெண்ட் விற்கும் விலையில் இவ்வளவு காஸ்ட்லி போட்டோ ஷூட் தேவையா தலைவரே? வெள்ள சேதத்தை பேனரில் பார்வையிட்டு தெரிந்துகொள்ளும் முதல்வர் என மீம்ஸ் மழை கொட்டத் துவங்கிவிட்டது.