வியட்நாமில் புதிய வைரஸ்

சீனாவில் கடந்த 2019ல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அவ்வைரஸ் உருமாற்றமும் அடைந்து பல நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் புதிய வகை அதிக வீரியம் கொண்ட வைரஸ் ஒன்று உருவாகி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிறது, காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்ததாகவும் வியட்நாம் அமைச்சர் நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.இது குறித்து வியட்நாம் அரசு, உலக சுகாதார அமைப்பை எச்சரித்துள்ளது. அது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு முறையாக வெளியிடும்.