குழந்தைகளுக்கான புது முயற்சி

கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, நாம் தாத்தா பாட்டியிடம் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச புராணங்களை எண்ணற்ற குட்டிக்குட்டிக் கதைகள் மூலம் கற்றோம். ஆனால், இன்றைய ஹிந்துப் பெற்றோர்கள் , தனிக்குடும்பம், இருவரும் வேலைக்குச் செல்லுதல், நேரமின்மை போன்ற பல காரணங்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஹிந்து தர்மங்களை அறிமுகப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு இவற்றை சொல்லித்தரும் குழந்தைகளுக்கான பிரத்தியேக புத்தகங்களோ தொலைக்கட்சி சேனல்களோ இல்லை. பிரசாரம் பதிப்பகம், இந்த வெற்றிடத்தை அதன் அற்புதமான தர்மக் கற்றல் கருவிகளால் நிரப்ப உதவுகிறது. வேதம், வேதாந்தம், இதிஹாசம், புராணம், ஆழ்வார்களின் படைப்புகள், ஆச்சார்யர்களின் ஸ்தோத்ரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளை குழந்தைகளுக்கு ஏற்ப வண்ண கதை புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள், காமிக் புத்தகங்கள், வண்ணம் தீட்டுதல், செயல்பாட்டுத் தாள்கள், முகமூடி, ஸ்லோகங்கள் நிரப்பும் தாள்கள், பக்திப் பெட்டகங்கள் போன்றவற்றில் இந்த பதிப்பகம் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்நிறுவனம், குழந்தைகளுக்கான நிகழ்வுகள், முகாம்களையும் ஏற்பாடு செய்கிறது. அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கான சில சுவாரஸ்யமான வலைப்பதிவுகளும் உள்ளன. மேலும் விவரம் அறிய https://pracharam.in/ என்ற இணையத்தை அணுகலாம்.