ஏற்றுமதியாளர்களுக்கு தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை அனுப்புவதற்கு தேவைப்படும் கன்டெய்னர்கள் சில நேரங்களில் போதிய அளவு கிடைக்காததால், குறித்த நேரத்துக்குள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ‘இ-மாடூல்’ என்ற ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், ஏற்றுமதியாளர்கள், தங்களுக்குத் தேவையான கன்டெய்னர்கள் குறித்த விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மொத்தமாக எவ்வளவு கன்டெய்னர்கள் உள்ளன எத்தனை ஒடுக்கீடு செய்யமுடியும் என்பதை இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆய்வு செய்து ஏற்றுமதியாளருக்கு ஒதுக்க முடியும். இதனால் துறைமுகங்களில் சரக்குக் கப்பல்களில் கன்டெய்னர்களை கையாள்வதற்கான காலம் கணிசமாக மீதமாவதுடன், துறைமுகங்களில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.