எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புது பெயர்

தேசம் முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புதியதாக பெயரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் அந்தந்த மாநில சுதந்திரப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், வரலாற்று சின்னங்களின் அடிப்படையிலான பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளது. மேலும் புதிய பெயர்கள் தொடர்பான விவரங்களை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) சில பெயர்களின் பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதில், முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி, பகுதியளவு கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும்படி மூன்று அல்லது நான்கு பெயர்களை பரிந்துரைக்க மாநில அரசுகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.