புதிய வருமான வரி இணையதளம்

வருமான வரி தாக்கல் செய்வதை எளிமையாக்க புதிய இணையதளத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய தளத்தில், மக்கள் எளிதாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவும், பிற முக்கிய பணிகள் அனைத்தையும் எளிதாகக் கண்காணிக்கவும் முடியும் என ஏற்கனவே வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. http://www.incometax.gov.in/ என்ற இந்த புதிய இணையதளத்தில், வருமான வரி அறிக்கை அப்லோடு, செய்ய வேண்டி பணிகள், வருமான வரி அறிக்கையின் ஸ்டேட்டஸ் என அனைத்தும் ஒரே டேஷ்போர்ட்ல் தெரியும். இதன் மூலம் வரி செலுத்துவோர் எளிதாக வருமான வரி சார்ந்த அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.

வருமான வரி அறிக்கையைத் தயார் செய்யும் மென்பொருள் இலவசமாக அளிக்கப்படும். இதனால், சாமானிய மக்களும் எளிதாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம். வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. வருமான வரி செலுத்துவோர் சம்பளம், வீட்டு மனைகள், வர்த்தகம் அல்லது வேலை குறித்து ஐ.டி.ஆர்-ல் புரோ ஆக்டிவ் முறையில் அப்டேட் செய்யலாம். மேலும், வருமான வரி செலுத்துவோரின் கேள்விகள் மற்றும் குழப்பங்களைத் தீர்க்க புதிய கால் சென்டர் ஒன்றை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 18க்குப பிறகு வருமான வரித்தளத்தின் புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.