கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்விக் கொள்கை இயற்றப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஒப்புதல் அளித்தது. இதன் ஓராண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஜூலை 29 வியாழன் அன்று உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.