மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் 17ம் தேதி காணொளி காட்சியின் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் ஆன்லைன் வகுப்பு நடத்துவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.