சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. அடுத்த ஆண்டு, உத்தரகண்டில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலகினார். இந்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் டேராடூனில் நடந்தது. இந்த கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.