புதுச்சேரியில் புதிய சட்டமன்றம்

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி பகுதியில் அமையவுள்ள புதிய சட்டமன்ற வளாகத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் அடிக்கல் நாட்டுகிறார்கள். இது 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டிடத்தை 15 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்துடன் இணைந்து, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகம், பிற அரசு அலுவலகங்களை அமைப்பதற்காக 2 மாடி கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும். புதுச்சேரி அரசிடம் ஒப்புதலைப் பெற்ற பின்பு முறையான முன்மொழிவு கடிதம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் மற்றும் நிதியைப் பெறுவதற்காக அனுப்பப்படும்.