அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகர் அருகே கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை பிரதமர் மோடி அக்டோபர் 30ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். மக்கள் மத்தியில் சூரியன் (டோனி) மற்றும் சந்திரன் (போலோ) ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக உள்ள பழங்குடியினரின் மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், மாநில அரசு இந்த விமான நிலையத்திற்கு “டோனி போலோ விமான நிலையம்” என்று பெயரிட்டுள்ளது. ஹாலோங்கி விமான நிலையம் பாசிகாட் மற்றும் தேசு விமான நிலையங்களுக்குப் பிறகு மாநிலத்தின் மூன்றாவது விமான நிலையமாகும், மேலும் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரில் உள்ள ஒரே விமான நிலையமாகும். 685 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் ஏர்பஸ் 320 வகை விமானங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றது. புதிய விமான நிலையத்தின் ஓடுபாதை 2,300 மீட்டர். நீளமானது, இது வருங்காலத்தில் ஏர்பஸ் 321 வகை விமானங்களை வழங்குவதற்காக 500 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படலாம். இந்திய விமான நிலைய ஆணையம் இந்த விமானநிலைய கட்டுமானத்தை ரூ.660 கோடி திட்டத்தை மேற்கொண்டது. ஹாலோங்கி விமான நிலையத்தில் எட்டு செக் இன் கவுன்டர்களுடன் போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் சுமார் 300 பயணிகளை கையாளும் திறன் கொண்டது. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுல் ஒன்றான இண்டிகோ, இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், பல விமானங்களை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.