பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற பூர்னியா வன்முறையை ‘ஹிந்துக்கள் மீதான ஜிஹாதி தாக்குதல்’ என்று குறிப்பிட்டதற்காக ஆர்கனைசர் பத்திரிகை ஆசிரியர் பிரபுல்லா கெட்கரின் டுவிட்டர் கணக்கிற்கு, டுவிட்டர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த கொடூரமான ஜிஹாதி தாக்குதல் குறித்த செய்திகளை, மற்ற பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும், சமூக ஊடகங்களும் வெளியிடாமல் மறைத்தபோது ஆர்கனைசர் பத்திரிகை மட்டுமே இதனை குறித்து முழுமையாக செய்தியை வெளியிட்டது. கருத்துச் சுதந்திரம் குறித்த டுவிட்டரின் இரட்டை நிலைப்பாட்டையும் மற்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை குறித்தும் அம்பலப்படுத்தும் மற்றொரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
என்ன நடந்தது பூர்னியாவில்?
பீகாரின் பூர்னியா மாவட்டத்தின் மஜ்வா கிராமத்தில், ‘மஹா-தலித்’ என்கிற பட்டியலினத்தவர்கள் சமூகத்தை சேர்ந்த60 குடும்பங்கள் வசிக்கின்றன.அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் வன்முறையாளர்கள், மஹா-தலித்துகள் காலனியை கடந்த மே 19 அன்று இரவு சுற்றி வளைத்து தீக்கிரையாக்கினர்.கொடூரமான இந்த சம்பவத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.இந்த கும்பல் தலித்துகளை கொடூரமாக தாக்கியது, ஆண்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் வீடுகளில் இருந்து வெளியே இழுத்து வந்து கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் வயதான ஓய்வுபெற்ற காவலாளி மேவலால் ராய் கொல்லப்பட்டார். பீகார் அரசு இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவிகளை செய்ய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
இந்த தாக்குதல் குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட பட்டியலின சகோதர குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.இந்த கொடூர சம்பவம் நடந்தது பைசி சட்டமன்றத் தொகுதியில்.இதன் சட்டமன்ற உறுப்பினர் சையத் ருக்னுதீன் அகமது என்பவர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியை சேர்ந்தவர் என்பதும் தமிழகத்தில் அந்த கட்சி தினகரனின் அ.ம.மு.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.