‘பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என நம்பப்பட்டாலும் அவரது உடல் மீட்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு பாடுபட்ட அவருக்கு உரிய மரியாதை அளிக்க அரசு தவறி விட்டது. அவரின் தியாகம் குறித்து தற்போதைய இளைஞர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் இடம்பெறச் செய்யக் கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கை முடித்து வைத்தது.