பா.ஜ.க. மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக (என்.எல்.சி) மாநில அரசின் நில கையகப்படுத்தல் நடவடிக்கைகளை, மக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை நிறுத்தி வைக்க கோரி வலியுறுத்தினார். இந்த கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, மத்திய ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கடலூர் பாண்டிச்சேரி ரயில் பாதை அமைத்துத் தந்ததற்காக நன்றி தெரிவித்தார். உளுந்தூர்பேட்டையில் ரயில் நிறுத்தம் கொண்டு வருவதற்கான மனுவையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார். முன்னதாக, அஸ்வத்தாமன், கடந்த வியாழக்கிழமை இதனால் பாதிக்கப்பட்ட மக்களை வடலூரில் சந்தித்தார். மக்கள் இது சம்பந்தமாக அவரிடம் மனு அளித்தனர். பின்பு பாதிக்கப்பட்ட வலங்கைமான் கிராமத்திற்கு நேரில் சென்று நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.