மேற்கு வங்கம் மற்றும் அசாம் தேர்தல்கள் முடிந்துவிட்டன. கொரோனாவும் மெல்ல தணிந்து வருகிறது. இந்த நிலையில், நமது மத்திய அரசு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நாகா சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கவும் விரைந்து பேசி முடிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாகாலாந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புக்குழு வரும் ஜூன் 19 அல்லது 20 தேதிகளில் நேரடியாக அல்லது இணையம் வழியாக நாகா பிரச்சினை மற்றும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து பேச உள்ளனர். இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் நீபியு ரியோ செயல்படுவார். இக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் என்.பி.எஃப் தலைவர் டி ஆர் ஜெலியாங், துணை முதல்வர் மற்றும் பா.ஜ.க தலைவர் ஒய் பாட்டன் மற்றும் அனைத்து முக்கிய அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஒரு சுயாதீன உறுப்பினர் இடம் பெறுவர். வரும் 2022ல் நடைபெற உள்ள மணிப்பூர் தேர்தலுக்குள் இந்த பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் மணிப்பூர் அரசுடன் தொடர்பில் உள்ளது.