சர்ச்சையில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி

பாரதம் சார்பில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், அவர் தங்கம் வென்ற நாளில், தனது ஈட்டியை கண்டுபிடிக்க முடியாததால், சற்று பதட்டமாக இருந்ததை கூறினார்.  பின்னர், பாகிஸ்தானின் தடகள வீரர் அர்ஷாத் நதீம், தனது ஈட்டியுடன் நடமாடுவதை பார்த்து அதனை திரும்பப் பெற்று போட்டியில் பங்கேற்றதாகக் கூறினார். இதனால், முதல் சுற்று ஈட்டி எறிதலில் அவர் சற்று அவசரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது ‘ஒரு பாரத வீரரின் ஈட்டியை, பாகிஸ்தான் வீரர் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்தார்?’ என்று சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின்போது  கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டவர்கள். எனவே, பாகிஸ்தான் வீரரும், ஈட்டியை எதாவது செய்திருக்கலாம் என்ற அச்சம் நெட்டிசன்களிடம் இருந்தது.

எனினும் மற்றொரு கோணமாக, அரபு செய்தி நிறுவனம் ஒன்று, சமீபத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான எந்த வசதிகளையும் செய்துத் தராதது குறித்து நதீம் புலம்பினார். பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தின் மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ஆசாத் அப்பாஸ் ஷா, பாரதக் குழு நன்றாக தயாராகி உள்ளனர். அவர்கள் விளையாட்டு உளவியலாளர், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர், இசைக்குழு என நன்றாக தயாராகி வந்திருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களிடம் அப்படி ஏதுமில்லை என கூறினார் என்பதையும் பதிவு செய்திருந்தது.