சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நட்ந்தது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் பாரத அணியின் சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் பாரத தேசத்தவர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.