கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் நீண்ட செயல்திறனைப் பராமரிக்க பூஸ்டர் டோஸ் தேவையா என்று பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவத் துறை பேராசிரியரான டாக்டர் சஞ்சீவ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும், ‘நாங்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் கிடைக்கும் அனைத்துத் தரவுகளையும் கொண்டு ஆராய்ச்சி செய்வோம். அதன் பின்னரே தடுப்பு மருந்து செலுத்துவதில் மேலும் ஒரு பூஸ்டர் தேவையா, அதன் அளவு என்ன என நாங்கள் தீர்மானிக்க முடியும். அனைத்துமே ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். எய்ம்ஸிலும் பூஸ்டர் டோஸ் குறித்து சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று அவர் தெரிவித்தார்.