சத்திஷ்கர் மாநிலம், சுக்மா பிஜாப்பூர் எல்லைக்கு அருகிலுள்ள ஜொங்குடா கிராமத்தில், கடந்த 2021 ஏப்ரல் 3ம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில் 22 சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரனம் அடைந்தனர். அவ்வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நக்சல் தலைவர் நம்பலா கேசவராவ் எனப்படும் வசவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மாதவி ஹிட்மா உட்பட 18 நக்சலைட்டுகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு எஃப்.ஐ.ஆரில், 350 முதல் 400 அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.