இயற்கை எரிவாயு சேமிப்பு தொட்டிகள்

2030 க்குள் ஆற்றல் தேவை 15 சதவிகித்த்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய அரசு அதற்காக சூரிய ஆற்றல், காற்றாலை, அணு மின் சக்தி உள்ளிட்டவைகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை எரிவாயு சேமிப்பு திறனை அதிகப்படுத்தும் விதமாக, குஜராத்தின் தஹேஜில் உள்ள தஹேஜ் விரிவாக்கத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக தலா 170,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய எல்.என்.ஜி சேமிப்புத் தொட்டிகளை பெட்ரோனெட் எல்என்ஜி நிறுவனம், எல் & டி ஹைட்ரோகார்பன் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதேபோல, ஒடிசாவில் உள்ள தாம்ரா எல்.என்.ஜி முனையத்திற்கான எல்.என்.ஜி தொட்டிகளையும் எல் & டி ஹைட்ரோகார்பன் இன்ஜினியரிங் நிறுவனம் கட்டமைத்து வருகிறது.