இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், இதுவரை தாங்கள் தயாரிக்கும் பைக் , கார், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்வதற்காக, வெளிநாடுகளுக்குதான் எடுத்து சென்றனர். ஆனால், தற்போது இந்த சோதனைகளை நம் பாரதத்தில் , மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலேயே செய்யமுடியும். ஆம், ஆசியாவிலேயே மிக நீளமான, உலக அளவில் 5ம் நிலையில் உள்ள ஹை ஸ்பீட் ட்ராக் 2,900 ஏக்கர் பரப்பளவில் ‘நேட்ராக்ஸ் சென்டர்’ மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது. வாகனங்களை மணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில் இந்த வளைவுகளில் சென்று ஸ்டியரிங் கன்ட்ரோலை சோதிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகை பரிசோதனை, தடம் மாறும்போது நிலைத்தன்மை உள்ளிட்ட பல சோதனைகளையும் மேற்கொள்ள முடியும். வோல்க்ஸ் வேகன், எப்.சி.ஏ, ரெனால்ட், லம்போர்கினி உள்ளிட்ட பல சர்வேதேச கார் உற்பத்தியாளர்கள் இந்த ட்ராக்கை பயன்படுத்தி கொள்ள இப்போதே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டு இருந்தாலும் ,வருங்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் முலம் நாட்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.