வாராக் கடன் வங்கியான, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்’ அடுத்த மாதம் புதிதாக துவங்கப்படவிருக்கிறது. இந்த வாராக் கடன் வங்கி, பிற வங்கிகளின் வாராக் கடன் கணக்குகளை பெற்று, கடன் பெற்ற குறிப்பிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு பிரத்தியேக நிதி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது முதற்கட்டமாக, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் வாராக் கடன் கணக்குகளை மட்டுமே நிர்வகிக்க உள்ளது. ஆனால், வருங்காலத்தில் வங்கிகள் தங்களுடைய மற்ற பெரிய வாராக் கடன் கணக்குகளையும் இந்த நிறுவனத்துக்கு மாற்றிவிடும் என தெரிகிறது.