“இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது. இதற்கான கடிதத்தை அனுப்புவதற்கு 31.10.2022 கடைசி நாளாகும். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி, தமிழ்நாடு சரகம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கையெழுத்தில் உள்ள கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும். “01.01.2022 அன்று 18 வயதிற்கும் கீழே அல்லது மேலே இருக்கிறேன் என நான் சான்றளிக்கிறேன்” என்ற வடிவில் வயதை நிரூபிக்கும் சான்றிதழை பங்கேற்பாளர்கள் அளிக்க வேண்டும். இந்த கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக தலைமை அஞ்சலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக அளவில் ஒவ்வொரு வகைமைக்கும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு ரூ.25,000, 2ம் பரிசு ரூ. 10,000 3ம் பரிசு ரூ. 5,000 வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு வகைமைக்கும் முதல் பரிசு ரூ. 50,000 2ம் பரிசு ரூ. 25,000 3ம் பரிசு ரூ. 10,000 வழங்கப்படும்.