பிரதமர் தனது மாதாந்திர வானொலி ஒலிபரப்பான ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில், ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் மக்கள், மூவர்ணக்கொடி படத்தை தங்கள் சமூக ஊடக கணக்குகளில் காட்சிப் படமாக வைக்குமாறு வலியுறுத்தினார். இது மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டிவிடும் ஒரு அற்புத முயற்சியாகும். இந்த அறிவிப்பையடுத்து பாரத மக்கள் பலர் தங்கள் சமூக உடக காட்சிப்படத்தை தேசியக்கொடியாக மாற்றி வருகின்றனர். இந்த சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் காங்கிரஸ் சேவா தளம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளிலும் நமது தேசியக்கொடி காட்சிப் படமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் குறிப்பா ஜவஹர்லால் நேரு கொடியை ஏந்தியுள்ள படத்தையே காட்சிப்படமாக வைத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் காங்கிரஸ் குடும்பத்தாருக்கு தங்கள் குடும்பத்தை சேர்ந்த நேருவைத் தவிர தேச விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற எந்த சுதந்திர போராட்ட வீரர்களில் வேறு ஒருவரையும் முன்வைக்க மனமில்லையா என சமூக உடகங்களில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.