தேசியக் கொடி ஏற்ற ஊக்குவிக்க வேண்டும்

மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வீட்டுக்கு வீடு தேசியக் கொடி என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தேசப்பக்தி உணர்வை ஏற்படுத்துவதும், தேசத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்வதும் இந்த நடவடிக்கையின் நோக்கம். இதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் சுதந்திர தினத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் உணவு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தங்களின் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒவ்வொரு மாநிலமும், 5 இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அழைக்க வேண்டும். அதேபோல் நிகழ்ச்சிகளை நடத்தும் மாநிலங்களும், தங்கள் குழுவினரை இதர மாநிலங்கள் நடத்தும் உணவு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்களிடையே பரஸ்பர புரிதல், பிணைப்பு ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.